Friday, July 7, 2017

வாஸ்துவின் இயற்கை தீர்வுகள்



இன்றைய நவீன காலத்தில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ப உலகில் அனைத்து இடத்திலும் கட்டிடங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவிட்டன. இக்கட்டிடங்கள் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இல்லை என்றால் நிம்மதியற்ற வாழ்வு அமையும்.நாம் நமது பிரச்சனையிலிருந்து வெளிவர முற்படும்பொழுது அதற்கு ஒரு தீர்வு ஏற்படும்.வீடோ வியாபாரஸ்தலமோ வாஸ்து விதிப்படி இல்லையென்றால் அதற்க்குண்டான தீர்வானது பணத்தினால் வாங்ககூடியவை அல்ல.அந்த தீர்வை இயற்கையே கொடுக்கும்.இயற்கையினால் உண்டாகும் தீர்வில் மட்டுமே மனிதனுடைய வெற்றி வாழ்விற்கு துணைபுரியும்.


வாஸ்துவில் யந்திரங்கள் வைப்பது, தகடு அடிப்பது, பாதரசமணி கோர்த்த செப்பு கம்பியை பூமிக்கு அடியில் புதைப்பது.கண்ணாடி வைப்பது , வாஸ்து மீன் வளர்ப்பது, தெருக்குத்துகளுக்கு பரிகாரமாக பிள்ளையார் சிலை வைப்பது எல்லாம் வேலையே இல்லை. இதனால் நமக்கு நன்மை ஏற்படுவதை விட விற்பவர்களுக்கே நன்மை ஏற்படும்.

வீடு மற்றும் தொழிற்சாலைகளில் இயற்கை தீர்வுகள் யாதெனில் கீழ் காணும் விசயங்களை நாம் எடுத்து கொள்ளலாம்.

வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும்

1.கணவனை இழந்த மனைவி

2.மனைவியை இழந்த கணவன்

3.கணவனை பிரிந்த மனைவி

4.மனைவியை பிரிந்த கணவன்

5.உடல் ஊனமுற்றோர்கள், மன வளர்ச்சி குன்றியவர்கள் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பேரு இல்லாதவர்கள், ஆதரவற்ற அனாதைகள் ஆகியோர் வசித்தாலும் வேலை பார்க்கும் பொழுது அந்த இடமானது 100% வாஸ்து கோளாறுகள் இருந்தாலும் அந்த இடத்தில் உள்ளோர் பெரிய பாதிப்பு இல்லாமல் வாழ்கின்றனர்.அந்த இடமானது மிக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்துவது இல்லை ( ஒருவர் தான் வசிக்க கூடிய வீடு 100% வாஸ்து குறைபாடுகள் இருந்தாலும் அவர் மிக உயரிய நிலையில் இருந்தால் அந்த இடம் சில சுப செயல்களை செய்து கொள்ளும். அவையாவன

தினமும் சூரிய பகவானை வணங்குதலும், இடைவிடாத குலதெய்வ வழிபாடும், ஏழைகளுக்கு திருமண உதவி செய்தலும் போன்றவையும் மிக சிறந்த பலன் கொடுக்ககூடிய செயல்கள் ஆகும்

பசு மற்றும் நாய் வளர்ப்பதும் காகத்திற்கு பச்சரிசி எள் வைப்பதும் நல்ல பலன்களை கொடுக்கும்.

ஏழைகளுக்கு பசி ஆற்றுவது வஸ்திர தானம் கல்வி தானம் போன்றவை அளிப்பது மிகவும் நல்லது.

பெண் பெயரால் நிலத்தை வாங்குதல் பெண் பெயருக்கு நிலத்தை கொடுப்பதும் பெண்ணை முன் நிறுத்தி வியாபாரம் செய்தலும் மிக சிறந்த பலன்களை கொடுக்க கூடிய செயல்கள் ஆகும்.

பெற்ற, வளர்த்த தாய் தந்தையரை எல்லா காலங்களிலும் நல்ல படியாக காப்பாற்றுதல் வேண்டும்.

எல்லாவற்றிக்கும் மேலாக நேர்மையான முறையில் பொருள் ஈட்ட வேண்டும்.

வட்டி தொழில் செய்து பொருள் ஈட்டலை தவிர்ப்பது நல்லது.

எண்ணம் செயல் எப்பொழுதும் நேர்மையாக இருக்க வடகிழக்கு மூலையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கண்டிப்பாக ஜன்னல் இருக்க வேண்டும். அந்த ஜன்னல் ஆனது ( 24 மணி நேரமும் ) திறந்து இருத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment