Friday, July 7, 2017

தொழிற்சாலை


1. மனையானது சதுரம் அல்லது செவ்வகமாக தான் இருக்க வேண்டும்.( நான்கு மூலையும் மூலை மட்டத்திற்கு )
2. நிலத்தில் தென்மேற்கு( நைருதி ) மூலை உயரமாகவும் தென்கிழக்கு ( அக்னி ) மூலை நைருதியை விட பள்ளமாகவும் வடமேற்கு ( வாயு மூலை ) தென்கிழக்கு ( அக்னி ) மற்றும் தென்மேற்கு ( நைருதி ) மூலையை விட பள்ளமாகவும் வட கிழக்கு ( ஈசானிய ) மூலையானது நைருதி அக்னி மூலைகளை விட பள்ளமாக இருக்க வேண்டும்.
3. நிலத்தில் வடக்கு பாதம் தெற்கை விட தாழ்வாகவும் கிழக்கு பாதம் மேற்கை விட தாழ்வாகவும் இருக்க வேண்டும்.
4. கேட் உள்பக்கம் திறக்கும் படி அமைக்க வேண்டும்.
5.உச்ச இடத்தில் உள்ள கேட்டிற்கு எதிராக இணைப்பு சாலை அமைக்க வேண்டும்.
6. மேல் நிலை நீர்தொட்டியை தென்மேற்கு மூலையில் அமைக்க வேண்டும்.
7.நிலமட்ட நீர்த்தொட்டி ( SUMP ) போர்வெல் கிணறு முதலியவை வடகிழக்கில் காலி இடத்தில் அமைக்கலாம்.வேறு திசைகளில் அமைத்து விட கூடாது.
8. தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் காலி இடங்களில் பெரிய உயரமான மரங்களை வளர்க்கலாம்.
9.ஈசானியத்தில் மரம் செடி கொடி போன்றவை வளர்க்க கூடாது.
10. ட்ரான்ஷ்பார்மர்,பவர் ஹவுஸ் போன்றவற்றை கிழக்கு மற்றும் வடக்கு திசையை பார்த்த தொழிற்சாலைகளுக்கு அக்னி மூலையில் அமைக்கலாம். தெற்கு மேற்கு பார்த்த தொழிற்சாலைகளுக்கு வாயு மூலையில் அமைக்கலாம்.
11. கனமான இயந்திரங்களை தென்மேற்கு மூலையில் அமைத்து கொள்ளலாம்.இந்த மூலையில் உயரமான இயந்திரங்களை வைப்பது சிறப்பு
12.உயரமான பிளாட்பாரம் மேல் ( அல்லது ) திண்ணை (அல்லது ) திண்டின் மீது அமைக்கவேண்டிய இயந்திரங்களை நைருதி மூலையில் அமைக்கவும் அதன் பிறகு அந்த இடத்திற்கு தெற்கிலோ மேற்கிலோ பிற இயந்திரங்களை அமைத்து கொள்ளலாம்.
13.பேக்கில் மேஜை வாயு மூலையில் இருக்கும் படி அமைத்து கொள்ளலாம்.
14.இயந்திரத்தின் எந்த பகுதியோ (அல்லது ) பிளாட்பாரமோ (அல்லது) வேலை செய்யும் மேசையோ கிழக்கு வடக்கு அவர்களை தொடவே கூடாது
15. தொழிற்சாலைக்குள் அலுவலகதை நிருத்தி பகுதியில் அமைக்க வேண்டும்.
16. மொத்த தொழிற்சாலையின் மைய பகுதியோடு,ஒரு பகுதியின் மைய பகுதியோ அல்லது வடகிழகிலோ இயந்திரத்தை வைக்க கூடாது.
17. தலைமை நிர்வாகி அந்த கட்டிடத்தின் தென்மேற்கு அறையில் உட்கார வேண்டும்.
18. பூமிக்கு அடியில் நீர்தேக்க தொட்டியை ஈசானிய மூலையில் வைக்க வேண்டும்.
19. பீரோக்கள் /இரும்புபெட்டிகள் போன்றவற்றை நைருதி மூலையில் வடக்கு/கிழக்கு பகுதியில் வைக்க வேண்டும்.
20. உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் போது வாயு மூலையில் இருந்து அனுப்பினால் நல்ல லாபம் தரும்.

No comments:

Post a Comment