Thursday, September 22, 2016

மத்தள வாய்வு வலி

கனமான மாவு சுக்காக தேர்ந்து எடுத்து தேவையான அளவு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அந்த சுக்கு அளவுக்கு சோற்றுக்குப் போடும் உப்பு எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு ஒவ்வொரு சுக்கின் மேலும் கவனமாக கவசமிட்டு உலரவைத்த பின் அடுப்பில் நெருப்பு ஆறி நீறுபூத்த அனலாக இருக்கும் சமயம் அதனுள் இந்த சுக்குகளை சொருகி வைத்து சிறிது நேரம் கழித்த பின்பு எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். (அனலில் வைத்த சுக்கு கருகி விடாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.)

அளவு 15 முதல் 30 அரிசி எடை வெந்நீர் அல்லது மோர் ஆகியவைகளில் குடிக்கலாம். வயிற்றில் உண்டாகும் சகல வாய்வு ரோகமும் வயிறு பெருத்து பலூன் போலாகி வாய்வு திரண்டு அடிக்கடி சூடாக ஆசனவாய் வழியே புதிய காடா துணி கிழிப்பது போன்ற சப்பதத்துடன் காற்று வெளியாவதும், வாய் வழி பெருஏப்பம் விடல் மந்தமான வாய்வு பொருமல் யாவும் குணமாகிவிடும்.

சுக்கு தனித்து தொடர்ந்து சில நாள் சாப்பிட மனதில் நன்கு வேலை செய்து அகங்காரம், கோபம், எரிச்சல் ஆகியவைகளையும் தணிக்க வல்லது. இதனை உடனடியாக சோதிக்க விரும்புவோர் ஒன்று செய்யுங்கள்! சுக்கை வெந்நீர் விட்டு அரைத்த விழுதியை கண் இமையின் உள்ளே தடவிப் பாருங்கள்! கண்கள் எரிய அகங்காரமெல்லாம் போய் கோபம் தணிந்து மன அமைதி பெறும். அது மட்டுமா? கண்களிலிருந்து அழுக்குகள் கெட்ட நீர் எல்லாம் வெளியாகி கண்கள் பிறகு சில்லென குளிர்ச்சியாக கண்கள் ஒளி பெறும். இதனை நம் முன்னோர்கள் சிறு வயதில் அடங்காது அட்டகாசம் செய்யும் முரட்டுப் பிள்ளைகளை ஒரே சுக்குத் துண்டால் சாதுவாகச் செய்து விடுவார்கள்!

சுக்கு ஒரு பழங்கா பெனிசிலின் என்று சொன்னால் மிகையல்ல. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் தின்றால் கோலை ஊன்றி நடந்தோர் கோலை விட்டு குலாவி நடப்பாரே! என்பது பண்டைய தமிழ்மொழி

No comments:

Post a Comment