கனவு கனவு கனவுதான்.... கனவு கனவு சுபகனவுதாங்க அதான் எதெல்லாம் சுபகனவு என்தை சுட்டிக்காட்டும் இந்த பதிவு.
#கனவுகளின்_சுபபலன்கள்
1. திருமணமாகாதோர் பாம்பு கடித்து குருதி வருவது போல் கனவு கண்டால் சீக்கிரம் திருமணம் நடைபெறும். திருமணமானோருக்கு இக்கனவு வந்தால் செல்வம் சேருமாம்.
2.சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
3.ஆமை, மீன் தவளை போன்றவை கனவில் கண்டால் கவலைகள் நீங்கும்.
4.கழுதை குதிரை கனவில் கண்டால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழக்கு சாதகமாக முடியும்.
5.மலத்தை மிதிப்பது போல கனவு கண்டால் சுப செலவு ஏற்படும்.
6. அரசர் சிரிப்பது போல கனவு கண்டால் புதிய கவுரவமும் சந்தோஷமும் ஏற்படும்.
7.சிங்கத்தை கனவில் கண்டால் எதிரியை வெல்வீர்கள்.
8. புதியவருடன் கைகுலுக்குவது போலக் கனவு கண்டால் கூட்டு தொழில் செய்வதற்க்கான நல்ல காலம் ஏற்படப்போகிறது என் அர்த்தம்.
9.வெள்ளை நிறப்பொருட்களோ ஆடைகளோ கனவில் கண்டால் காதல் வெற்றி, தொழிலில் லாபம், மக்கள் மத்தியில் செல்வாக்கு என சுப பலன்கள் மேலோங்கும்.
10. சிவப்புகல் பதிக்கப்பட்ட மோதிரமோ டாலரோ கம்மலோ வளையலோ கையில் வைத்திருப்பது போல கனவு கண்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகும். திருமணம் ஆனவர்களுக்கு அழகான பெண் குழந்தை கிடைக்கும்.
#கனவு_வருவதற்க்கான_காரணங்கள்.
உடலில் பித்தம் வாதம் கபம் போன்றவை பாதிக்கப் படுவதால். ஜாதக ரீதியான குறிப்பிட்ட தசைகள், புத்திகள் நடைபெற்றால். பிறர் செய்த செய்வினைகளால்,எந்த பொருளையாவது அதிகமாக நினைத்துக் கொண்டு,அல்லது கவலை பட்டுக்கொண்டு உறங்க செல்வது,ஒருவரை மிக ஆழமாக நேசிப்பது போன்றவைகளால் வருகிறது.
இரவு 8:00 to 11:00 மணிக்குள் கனவு வந்தால் மூன்று மாதத்திலும், 11:00 to 1:00 மணிக்குள் வந்தால் பத்து நாட்களிலும், 3:30 to 6:00 கனவு வந்தால் குறுகிய காலத்திலும் (உடனேயும்) பலிதமாகும்.
#குறிப்பு:வந்த கனவு மறந்து போனாலும், பகலில் கனவு வந்தாலும் பலன் கிடையாது.
என்றும் சாஸ்திர பணியில்
#குறிப்பு:வந்த கனவு மறந்து போனாலும், பகலில் கனவு வந்தாலும் பலன் கிடையாது.
என்றும் சாஸ்திர பணியில்
No comments:
Post a Comment