Tuesday, November 21, 2017

காணாமல் போன, களவு போன பொருள் கிடைக்க

காணாமல் போன, களவு போன பொருள் கிடைக்க – திருக்கோகர்ணமலை.




புதுக்கோட்டை,மெயின் சாலையிலேயே திருக்கோகர்ணேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திக்குத் தான் சக்தி அதிகம். அதாவது ஸ்ரீ பிரகதாம்பாள் எனப்படும் அரைக்காக அம்மனின் இராஜாங்கம் தான் இங்கே, தோடு ஜிமிக்கி,மோதிரம், செயின், வீட்டுப் பத்திரத்தை வீட்டில் எங்கேனும் வைத்து விட்டு  கை பிசைந்து தவிப்பவர்கள் விறுவிறுவெனச் சென்று வெல்லக் கட்டியை பூஜையறையில் வைத்து, அரைக்காசு அம்மனை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். களவு போன ஆடு, மாடுகளையும், ஆபரணங்களையும் மீட்டுத் தருகிறார்கள். வீடு- வாசல் வாங்குவதில் சிக்கல் எனத் தவிப்பவர்கள், ஆலயத்தில் அரைக்காசு அம்மனின் திருவுருவக் காசினை வாங்கிச் சென்று , பூஜையறையில் வைத்து, மஞ்சள், குங்குமம் சார்த்தி வழிபட நினைத்தது நிறைவேறும்.

இருப்பிடம்:   புதுக்கோட்டையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

👉https://goo.gl/maps/9EfFf3RDQ8kCPDg1A

No comments:

Post a Comment