Sunday, November 26, 2017

சாம்பிராணி தூபம்
-----------------------------
வீட்டில் நிம்மதியின்மை, சதா சர்வ காலமும் காரணமின்றி சச்சரவுகள், தூக்கமின்மை, தம்பதியினருக்கு மத்தியில் வாக்குவாதங்கள், திருஷ்டி, எதிர் மறை சக்திகள் போன்ற அனைத்திற்க்கும் உடனடி சர்வ ரோக நிவாரணியாக செயல்படுவது கீழ்க்கண்ட சாம்பிராணி தூபம். பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.அனைத்தையும் பொடித்து சிறுது சம்பிராணியுடன் தூபம் தினசரி தொடர்ந்து 45 நாட்கள் போட்டு வர அனைத்து எதிர் மறை சக்திகளும் விலகும். மேற்கண்ட பொடியோ பொருட்களோ கால்களில் பட கூடாது. இவற்றை வாங்கி பொடித்து செய்ய நேரமில்லாதவர்கள்
இரண்டு மூன்று நாட்களிலேயே இதன் சக்தியை உணரலாம். வெண்கடுகு மற்றும் நாய்க்கடுகு இரண்டும் பைரவருக்குடையது. மருதாணி விதை திருமகளுக்குரியது. அறுகம்புல் விநாயகரின் மூலிகை ஆகும். வில்வம் மற்றும் வேம்பு முறையே சிவன் மற்றும் சக்தி இவர்களுக்குரியது. மேற்கண்டவற்றை நெருப்பில் தூவும் போது பைரவ, சிவ கணங்கள் மற்றும் சக்தியின் கணங்கள் தோன்றி தீய சக்திகளை அழிப்பார்கள்.
1. வெண்கடுகு 250 கிராம்
2. நாய்க்கடுகு 250 கிராம்
3. மருதாணி விதை 250 கிராம்
4. சாம்பிராணி 250 கிராம்
5. அருகம்புல் பொடி 50 கிராம்
6. வில்வ இலை பொடி 50 கிராம்
7. வேப்ப இலை பொடி 50 கிராம்

Saturday, November 25, 2017


கனவு கனவு கனவுதான்.... கனவு கனவு சுபகனவுதாங்க அதான் எதெல்லாம் சுபகனவு என்தை சுட்டிக்காட்டும் இந்த பதிவு.
   #கனவுகளின்_சுபபலன்கள்
  1. திருமணமாகாதோர் பாம்பு கடித்து குருதி வருவது போல் கனவு கண்டால் சீக்கிரம் திருமணம் நடைபெறும். திருமணமானோருக்கு இக்கனவு வந்தால் செல்வம் சேருமாம்.
2.சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
3.ஆமை, மீன் தவளை போன்றவை கனவில் கண்டால் கவலைகள் நீங்கும்.
4.கழுதை குதிரை கனவில் கண்டால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழக்கு சாதகமாக முடியும்.
5.மலத்தை மிதிப்பது போல கனவு கண்டால் சுப செலவு ஏற்படும்.
6. அரசர் சிரிப்பது போல கனவு கண்டால் புதிய கவுரவமும் சந்தோஷமும் ஏற்படும்.
7.சிங்கத்தை கனவில் கண்டால் எதிரியை வெல்வீர்கள்.
8. புதியவருடன் கைகுலுக்குவது போலக் கனவு கண்டால் கூட்டு தொழில் செய்வதற்க்கான நல்ல காலம் ஏற்படப்போகிறது என் அர்த்தம்.
9.வெள்ளை நிறப்பொருட்களோ ஆடைகளோ கனவில் கண்டால் காதல் வெற்றி, தொழிலில் லாபம், மக்கள் மத்தியில் செல்வாக்கு என சுப பலன்கள் மேலோங்கும்.
10. சிவப்புகல் பதிக்கப்பட்ட மோதிரமோ டாலரோ கம்மலோ வளையலோ கையில் வைத்திருப்பது போல கனவு கண்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகும். திருமணம் ஆனவர்களுக்கு அழகான பெண் குழந்தை கிடைக்கும்.
    #கனவு_வருவதற்க்கான_காரணங்கள்.
    உடலில் பித்தம் வாதம் கபம் போன்றவை பாதிக்கப் படுவதால். ஜாதக ரீதியான குறிப்பிட்ட தசைகள், புத்திகள் நடைபெற்றால். பிறர் செய்த செய்வினைகளால்,எந்த பொருளையாவது அதிகமாக நினைத்துக் கொண்டு,அல்லது கவலை பட்டுக்கொண்டு உறங்க செல்வது,ஒருவரை மிக ஆழமாக நேசிப்பது போன்றவைகளால் வருகிறது.
  இரவு 8:00 to 11:00 மணிக்குள் கனவு வந்தால் மூன்று மாதத்திலும், 11:00 to 1:00 மணிக்குள் வந்தால் பத்து நாட்களிலும், 3:30 to 6:00 கனவு வந்தால் குறுகிய காலத்திலும் (உடனேயும்) பலிதமாகும்.
#குறிப்பு:வந்த கனவு மறந்து போனாலும், பகலில் கனவு வந்தாலும் பலன் கிடையாது.
  என்றும் சாஸ்திர பணியில்

Tuesday, November 21, 2017

காணாமல் போன, களவு போன பொருள் கிடைக்க

காணாமல் போன, களவு போன பொருள் கிடைக்க – திருக்கோகர்ணமலை.




புதுக்கோட்டை,மெயின் சாலையிலேயே திருக்கோகர்ணேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திக்குத் தான் சக்தி அதிகம். அதாவது ஸ்ரீ பிரகதாம்பாள் எனப்படும் அரைக்காக அம்மனின் இராஜாங்கம் தான் இங்கே, தோடு ஜிமிக்கி,மோதிரம், செயின், வீட்டுப் பத்திரத்தை வீட்டில் எங்கேனும் வைத்து விட்டு  கை பிசைந்து தவிப்பவர்கள் விறுவிறுவெனச் சென்று வெல்லக் கட்டியை பூஜையறையில் வைத்து, அரைக்காசு அம்மனை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். களவு போன ஆடு, மாடுகளையும், ஆபரணங்களையும் மீட்டுத் தருகிறார்கள். வீடு- வாசல் வாங்குவதில் சிக்கல் எனத் தவிப்பவர்கள், ஆலயத்தில் அரைக்காசு அம்மனின் திருவுருவக் காசினை வாங்கிச் சென்று , பூஜையறையில் வைத்து, மஞ்சள், குங்குமம் சார்த்தி வழிபட நினைத்தது நிறைவேறும்.

இருப்பிடம்:   புதுக்கோட்டையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

👉https://goo.gl/maps/9EfFf3RDQ8kCPDg1A

திருவெண்காடு – பூர்வ ஜென்ம கர்ம

திருவெண்காடு – பூர்வ ஜென்ம கர்ம 

   திருவெண்காடு – பூர்வ  ஜென்ம கர்ம தோஷம்.
    இந்த தோஷமானது பித்ருக்கள் என்னும் முன்னோர்கள் சாபம் நாக சாபம், பத்தினி சாபம் கோ சாபம் போன்ற வழிகளிலும் நம்மை வந்தடைகிறது. ஜாதகத்தில் மறைமுகமாகவும் இருக்கும். ஜோதிடப்படி 5ம் இடம் பூரிவீக ஜெனனத்தையும், 9ம் இடம் அடுத்து  வரும்  ஜெனனத்தையும் லக்னம் தற்போதைய ஜெனனத்தையும் குறிக்கும். எனவே தான் 1,5,9 ம் இடங்கள் திரிகோணங்களாகும். பொதுவாக 6ம் இடம் என்பது நோய், வழக்கு, எதிரி,கடன் போன்றவற்றை குறிக்கும். எனவே ஆறமிடம் வலுக்கக் கூடாது என்பார்கள். 6ம் இடம் என்பது 9ம் இடத்துக்கு 10ம் இடம். அதாவது தகப்பனார் ஸ்தானத்துக்கு 10ம் இடம் தகப்பனார் செய்த கர்மத்தின் விளைவே நாம் அதை அனுபவிக்கவே பிறந்து உள்ளோம். அந்த தகப்பனார் ஸ்தானத்துக்கு 5ம் இடம்  இலக்கனம்.
      இந்த தோஷமானது 5ம் இடம் 5மிடத்து அதிபதியின் நிலையை கொண்டு ஏற்படுவதாகும். 5ம் இடத்தில் சனி, ராகு, கேது சேர்க்கை, 5க்குடையோர் மறைவு நீசம், போன்ற நிலைகளால் அறிந்து கொள்ளலாம். இதில் ராகு,கேதுவுக்கு முக்கியத்துவம் இவர்கள் பூர்வஜென்பத்திற்கேற்ப தண்டனைகளை நமக்கு அளிப்பவர்கள். பூர்வீகத்தில் வில்லங்கம், தொழிலில் சரிவு மனக்கோளாறு, திருமணம்  நடக்காமல் போவது, நடந்தாலும் நல்லபடியாக  இருக்காது. அவமானம் என எல்லா பக்கங்களிலிருந்தும் கல்லடி பட்டுக் கொண்டே இருக்கும்.
   உண்மையிலேயே இந்த தோஷத்திலிருந்து விடுபட வேண்டும். நல்ல சூழ்நிலை நிலவ வேண்டுமெனில் சீர்காழி அருலிலுள்ள திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் தான் தர்ப்பணம் திதி போன்றவை செய்ய வேண்டும். இதுவே நாடி ஜோதிடத்தில் குறிப்பிட்டுள்ள  முக்கியமான இடமாகும்.  ஜாதகத்திலுள்ள பூர்வ ஜென்ம கர்ம தோஷத்திற்கு திருவெண்காட்டில் திதி செய்து நல்வாழ்வு பெறலாம்.