ஈரோடு மாவட்டம் கொடிமுடி மகுடேஸ்வரர் கோயில் ஈசன் அகத்தியருக்கு காட்சியளித்த தலம் என்பதால், இங்கு சிவபெருமான் சந்நதிக்கு வலதுபுறம் பார்வதி சந்நதி உள்ளது. பார்வதிக்கு சிம்ம வாகனம்தானே இருக்கும்? இங்கு நந்தி வாகனம்.
* வழக்கமாக நடராஜர் சிலை ஒரு காலை உயர்த்தியபடி அமைந்திருக்கும்; இங்கு இரண்டு கால்களும் தரையில் ஊன்றியபடி காணப்படும்.
* சிவாலயங்களில் நந்தியின் 4 கால்களும் மடங்கிய நிலையிலிருக்கும். இங்கு வலதுகால் முழுவதும் மடங்கியும், இடதுகால் லேசாக மடிந்தும் இருக்கும்.
* சதுர்முக தாண்டவம் எனப்படும் நடராஜரின் நடன அமைப்பு இங்கு மட்டுமே உள்ளது.
* ஒரே கோயில் வளாகத்தில் மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள், வடிவுடையம்மன் கோயில்கள் தனித்தனி ராஜகோபுரங்களுடன் காணப்படுகின்றன.
* சனீஸ்வரர் காக்கை வாகனத்தில் நான்கு கைகளுடன் ஒரு கையில் பாம்பும், ஒரு கையில் சூலாயுதத்துடனும் காட்சி தருகிறார்.
கல்கி அவதாரக் கோயில்
ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூர் மூன்று பக்கங்களிலும் மலைத் தொடர்களால் சூழப்பட்ட ஒரு நகராகும். இதில் கிழக்குப் பகுதியிலுள்ள மலைச்சரிவில் கால்டா என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு சூரியன், அனுமன், விஷ்ணு, விநாயகர் ஆகியோருக்குக் கோயில்கள் உள்ளதுடன் திருமால் எடுக்க விருக்கும் கல்கி அவதாரத்திற்கும் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. இதனை கல்கி காமந்திர் என்று அழைக்கின்றனர்.
இதனைக் கட்டியவர் புகழ்பெற்ற கட்கவா என்ற ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவரும், வானசாஸ்திரத்தில் மிகப்பெரிய மேதையாகவும் விளங்கிய ஜெயசிங் என்ற மன்னர். இவர் ஒரு முறை இவ்விடத்தில் அஸ்வமேதயாகம் செய்து, வெண்சலவைக் கல்லால் ஆன குதிரை சிலை ஒன்றை நிறுவினார். இச்சிலை கல்கி அவதாரக் கோயிலுக்கு அருகில் அமைந்து, கல்கி பகவான் குதிரை மீது அமர்ந்து வருவதை நினைவுபடுத்துவதாக அமைந்து உள்ளது எனலாம்.
இரா.கணேசன்
நவகிரக நரசிம்மர்
கார்த்திகையில் ஐயப்பனுக்கு மாலை போடுவர். முருகனுக்கும், சிவனுக்கும் தீபத்தன்று தீபம் ஏற்றி வழிபடுவர். ஆனால், கார்த்திகையில் கொண்டாடப்படும் பெருமாளைத் தெரியுமா? சுங்குவார் சத்திரத்தில் நரசிம்மர் வழிபாடு நடைபெறுகிறது. யோக கோலத்துடன், 16 அடி உயரத்தில் லக்ஷ்மி நரசிம்மராக அருள்கிறார் பெருமாள். இந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி கட்டவாக்கம் என்னுமிடத்தில் ஆலயம் கொண்டுள்ளார். ஆதாரபீடம், கூர்மபீடம், பத்மபீடம், அநந்தபீடம், யோகபீடம் என ஐந்து பீடங்களின் மேல் மிக கம்பீரமாக வீற்றுள்ளார். இவருக்கு 12 பற்கள் அமைந்துள்ளன. இது, 27 நட்சத்திரங்கள் அடங்கிய 12 ராசிகளைக் குறிக்கும்.
இவரின் இடக்கண் சூரியன், வலக்கண் சந்திரன், நெற்றிக்கண் செவ்வாய், நாசி சுக்கிரன், மேல் உதடு குரு, கீழ் உதடு புதன், வலது காது கேது, இடது காது ராகு, நாக்கில் சனி. எனவே நவகிரக பரிகார தேவதையும் ஆகிறார் இவர். இவர் ஏந்தியுள்ள ஆயுதங்கள் ஆறும் இவரின் 4 அவதாரங்களைக் குறிக்கும். கூர்மபீடம்: கூர்ம அவதாரம். வில்-அம்பு: பரசுராம-ராம அவதாரம். வஜ்ரதம்க்ஷ்ட்ரம் வராஹ’ சக்கரம்: கிருஷ்ணாவதாரம். ஜெய-விஜய சாப வதம் செய்ய பெருமாள் உபயோகித்த ஆயுதங்கள் யாவும் இந்நரசிம்மன் தாங்கியுள்ளது விசேஷம்.

No comments:
Post a Comment