Saturday, May 27, 2017

கலப்பு எண்னைய் தீபம் வேண்டாம் அது தீமையை தரும் அன்பர்களே!

பஞ்ச   கவ்யம்  தெளிப்பதால்  உண்டாகும்
பலன்கள்
வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே  இருக்கின்றனர்.


ஒரு விவசாயியின் ஜாதகத்தை சோதித்து பார்த்த ஜோதிடருக்கு , உள்ளூர தயக்கம் !
காரணம் , அன்றிரவு எட்டு மணிக்கு அந்த விவசாயிக்கு மரணம் நேரக்கூடிய கண்டம் இருந்தது ;
அதை ..அவனிடம் நேரிடையாக சொல்ல விரும்பாமல் , ''ஐயா ...எனக்கு நிறைய வேலைகள் உள்ளன ...உங்கள் ஜாதகம் என்னிடமே இருக்கட்டும் ! ..நாளை காலையில் என்னை வந்து பாருங்கள் !'' என்றார் ;
ஜோதிடரின் வீட்டிலிருந்து புறப்பட்ட விவசாயி , தன் கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தபோது , மாலை சாய்ந்து இருள் சூழ ஆரம்பித்தது ! அப்போது , லேசாக மழைத்தூறல் ஆரம்பிக்க சற்றைக்கெல்லாம்
பெருமழை கொட்ட துவங்கியது! மழையில் நனைந்தவாறே ,சுற்றுமுற்றும்பார்வையை சுழலவிட்டவனின் கண்களில்..அந்த .பாழடைந்த சிவன் கோயில் தென்பட......ஓடோடிச்சென்ற அவன், கோயிலின் முன்னே இருந்த மண்டபத்தில் ஒதுங்கினான்:..மண்டபத்தில் நின்றவாறே , கோயிலின் பாழடைந்த நிலை கண்டு உள்ளூர வருந்தினான் !
தன்னிடம் போதுமான பணம் இருந்தால் அக்கோயிலை புதுப்பிக்கும் வேலையை செய்வேன் என்று மானசீகமாக நினைத்துக்கொண்டதோடு நில்லாது .....அக்கோயிலை புதுப்பிப்பதாக மானசீகமாக கற்பனையும் செய்து கொண்டு ....கோபுரம் ...ராஜகோபுரம் ...உட்பிராகாரங்கள் மற்றும் ..மண்டபங்கள் முதலானவற்றை மனதிற்குள் கற்பனையாகவே அமைத்து ....வேதியர்கள் புடைசூழ கும்பாபிஷேகமும்விமரிசையாக நடத்தி ...........இப்படி தன்னை மறந்து சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தவனின் பார்வை தற்செயலாக மண்டபத்தின் எதிரே நோக்க .......
அங்கே ஒரு பெரிய கருநாகம் படமெடுத்த நிலையில் ..அவனை கொத்த தயாராக இருந்தது !!
சூழ்நிலையின் விபரீதத்தை உணர்ந்த அவன் , மறுகணம் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வரவும் ,மண்டபம் ' கிடுகிடு ' வென்று இடிந்து விழவும் சரியாக இருந்தது ! இப்போது மழையும் நின்று விட்டிருக்க ....விவசாயியும்வீடு போய் சேர்ந்தான் :
பொழுது விடிந்ததும் முதல் வேலையாய் ஜோதிடர் வீட்டுக்கு சென்ற அவனை கண்டு ஜோதிடருக்கு வெகு ஆச்சரியமும் , திகைப்பும் !
' எப்படி இது சாத்தியம் ? நாம் ஜோதிடக்கணக்கில்தவறிவிட்டோமோ ' பலவாறான எண்ண அலைகளுடன் மீண்டும் அவனது ஜாதகத்தை அவர் ஆராய ..
.அவரது கணக்கு சரியாகவே இருந்தது! பின் , ஒரு உந்துதலின் பேரில்அவர் ஜோதிட நூல்களை துல்லியமாக ஆராய்ந்த அக்கணம் ....
' இப்படிப்பட்ட கண்டத்திலிருந்து ஒருவன் தப்ப வேண்டுமானால் , அவனுக்கு ஒரு சிவன் கோயிலை கட்டி முடித்து , கும்பாபிஷேகமும்செய்த புண்ணியம் இருக்கவேண்டும் ' என்று ஜோதிட நூலில் குறிப்பிட்டிருந்தது!
'ஒரு ஏழைக்கு, சிவன் கோயிலை கட்டி , கும்பாபிஷேகமும்செய்வது என்பது எப்படி சாத்தியம் '
என்று எண்ணியவாறே ஜோதிடம் அறிவித்த அனைத்து விவரங்களையும் அவனிடம் அந்த ஜோதிடர் இப்போது எடுத்துரைக்க .....அவனோ , வெகு இயல்பாக முந்திய நாள் இரவு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவரிடம் எடுத்துரைத்தான்!!.
கேட்டுக்கொண்டிருந்த ஜோதிடருக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி !!
.
தெய்வப்பணி பற்றிய கற்பனை கூட இடையூறுகளை நீக்கும் !
நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும்

Tuesday, May 23, 2017

பிறர் மனம் நோக வேதனைப்படுத்தி நாம் சேர்க்கும் பணம் கடுமையான வேதனையைத்தான் தரும்



1.இன்று பெரும்பகுதி எதைக் குறிக்கோளாக வைத்துத் திருமணங்கள் நடைபெறுகின்றது?
மனிதராகப் பிறந்த நாம் இன்று எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்? என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

பெரும்பாலான குடும்பங்களைப் பார்த்தோமென்றால் மருமகளிடம் கடுமையாகப் பேசுபவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள். அல்லது மருமகள் மாமியாரிடம் கடுமையாகப் பேசும் நிலை இருக்கின்றது.

இன்று குடும்பங்களில், சிறு சிறு சர்ச்சைகள் இருந்து கொண்டிருக்கின்றன. இவைகளெல்லாம் எதனால் வருகிறதென்றால், மருமகளாக வருபவள் 50/100 பவுனுடன் வரவேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

ஆனால் தன் மகளைக் கலயாணம் செய்து கொடுக்கும் பொழுது 10 பவுனைக் குறைத்துவிடலாமா, அல்லது 20 பவுனைக் குறைத்துவிடலாமா.., என்று நினைக்கின்றார்கள்.

மருமகள் வந்தால் இத்தனை பவுன் வேண்டும் என்று கேட்கின்றோம். ஆனால் இதனின் உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அந்த ஆசையின் எண்ணங்கள்தான் வருகின்றதே தவிர “மனிதரைத் தெளிவாக்கும் நிலைகள் வருகின்றதா?” என்றால்  இல்லை.

ஆகவே, இத்தகைய உணர்வின் தன்மைகளை வளர்த்துக் கொண்டால் நமது உயிர், அதனின் அணுக் கருக்களைத்தான் நமக்குள் உருவாக்கும்.

2.”மருமகள் இவ்வளவுதானே கொண்டு வந்தாள்…” என்று விஷத்தை ஊட்டுவார்கள்
நியாயம் தர்மம்,” அனைத்தும் பேசுவார்கள். ஆனால் மகனுக்கு மனைவியாக வருபவள் இவ்வளவு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும், என்று “ஏராளமாக எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

மகனைப் பார்த்து “ஏன்டா ராஜா.., உன்னுடைய மனைவி இவ்வளவு தானே கொண்டு வந்தாள்…” என்று விஷத்தை ஊட்டுவார்கள்.

இந்த விஷத்தின் தன்மை கொண்டு நான்கு தரம் சொன்னால் வெறுப்பாகும். அந்த வெறுப்பின் தன்மை கொண்டு தனது அம்மாவின் மனதை அடக்க.., “ஒரு பத்தாயிரம் வாங்கி வந்துவிடு என்று மனைவியிடம் கூறுவார்கள்.

அங்கே உள்ள கஷ்டம் இவர்களுக்குத் தெரியாது.

இப்படி வேதனைப்படுத்தி வேதனைப்படுத்தி வாங்கிய காசை இவர்கள் அனுபவிக்க முடியாது. எதற்குச் செல்வழிப்பார்கள் என்றால்,
1.இவர்களுக்குள் வேதனைப்படுத்தியதின் உணர்வால் விளைந்த நோயை நீக்கச் செலவழிப்பார்கள்.
2.யார் யாரோ தின்பதற்குக் கொடுத்துவிட்டு வருவார்கள்.
3.இவர்களுக்கு எதற்காவது உதவுகிறதா என்றால் அதுவும் இல்லை.
4.நரக வேதனை மட்டும்தான் மிச்சமாகும்.

சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். மற்ற மிருகங்கள் தான் வாழப் பிறரிடம் பணம் கேட்கின்றதா?

இல்லை.

மனிதராகப் பிறந்த நாம் மட்டும் பணம் பொருள் வேண்டும் என்று “பிறரை வேதனைப்படுத்துகின்றோம்.

3.வேதனைப்படுத்திக் கொண்டு வந்த பணம் தங்காது – வேதனையைத்தான் தரும்
செல்வத்தின் பெயரில் இன்னும் ஏன் பணம் கொண்டு வரவில்லை? என்று பிறரை வேதனைப்படுத்திச் செல்வத்தைக் கொண்டு வந்தால் அங்கே சிரமம் வரும். பிறகு கொண்டு வந்ததெல்லாம் அடகு வைத்துச் சாப்பிட வேண்டிய நிலை வரும்.

வேதனைப்படுத்திக் கொண்டு வந்த பணம் தங்காது.

அதன்பின் இதனின் வேதனையின் உணர்வுகளைச் சுவாசித்து நம்மையறியாது நமக்குள் தண்டனை கொடுக்கும் உணர்வுகளைச் சுவாசிக்கின்றோம்.

நாம் எண்ணியது எதுவோ அதுவாக நம் உணர்வின் தன்மை அங்கே உருவாக்கிவிடும்.

உதாரணமாக நாம் மனைவியை அடித்து உதைத்து, “உன் தாய் தந்தையிடம் போய்ப் பணம் வாங்கி வா!” என்று சொன்னால் அதைக் கேட்ட மனைவி “ஐயோ,” என்று அழுது கொண்டிருக்கும்.

எப்படியாவது, கொண்டு வா என்று துன்புறுத்துவோம், அல்லது மாமியார் இதைச் செய்வார்.

1.அதை ரசித்தால்
2.உடல் முழுவதும் வேதனைகளை உருவாக்கும் “அணு செல்கள் நிச்சயம் உருவாகும்.
3.இதிலிருந்து யாரும் தப்பமுடியாது.

அப்படி வேதனைகளை உருவாக்கும் அணுக்கருக்களாக உடலில் உருவாகிவிட்டால், கொஞ்ச நாளில் நோய் வரும் அதன்பின்,
1.இந்த டாக்டரிடம் போனேன்,
2.இந்த நகையை அடமானம் வைத்தேன் அந்த நகையை அடமானம் வைத்தேன் என்ற நிலை வரும் பொழுது வெறுப்பின் உணர்வுகள் தோன்றும்,
3.தொழிலும் குன்றும், மனவேதனையும் கூடும்.

இது போன்று பிறரை வேதனைப்படுத்தி பணம் பொருள் கேட்டு வாங்கிய குடும்பங்களின் நிலையை நீங்கள் கண் கூடாகக் காணலாம்.

பணம் வந்தால்.., பின்னால் நோயும் வரும். உடலில் நோய் வந்தால் நரக வேதனையைத்தான் உடலில் வளர்க்கும் நிலை வரும்.

இந்த மனித உடலில் விஷத்தன்மை கூடிய பிறகு உடலை விட்டு வெளியே செல்லும் உயிரான்மா, அடுத்து விஷம் கொண்ட கீழான பிறவிகளுக்கே சென்று சேரும்.

இதைத்தான்  கீதையில் “நீ எதை எண்ணுகின்றாயோ, அதுவாகின்றாய் என்று நமது வாழ்க்கையின் ரகசியத்தை, ஒரு சொல்லுக்குள் அடக்குகின்றது உணர்த்துகின்றது.

4.குடும்பத்திலுள்ளோர் தம் மனதை உயர்த்தினால் செல்வம் அங்கே கொட்டும்
நம்முள் மனமொத்த உயர்ந்த நற்குணங்களைப் பெறும்பொழுது,  அது நமக்குள் மகிழ்ச்சியை உருவாக்குகின்றது. தொழில் எண்ணங்களைப் பெருக்கச் செய்கின்றது.

இதன் வழி கொண்டு செல்வத்தை ஈட்டுவோர் எவரோ அவரே மனிதராக முடியும்.

ஆனால் பொருள் எளிதாக வருகிறதென்று பிறரை வேதனைப்படுத்திப் பொருள் சம்பாதிக்க எண்ணினால் அவர்கள் நொந்திடும் உணர்வுகள் இங்கே வந்து விடுகின்றது,

இது போன்ற தீய நிலைகளிலிருந்து மனிதர் தாம் விடுபடும் எண்ணம் பெறவேண்டும்.

ஏனென்றால் மனிதர்களான நமக்குப் பணம் தேவையில்லை, “உயர்ந்த மனம் தேவை.

இரு மனமும் உயர்ந்த நிலை கொண்டு
1.என் கணவர் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.
2.அவர் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும்,
3.அவர் அருள் ஞானம் பெறவேண்டும்.
4.அவர் செய்யும் தொழில் எல்லாம் உயர்வாக வேண்டும்,
5.அவரை அனைவரும் போற்றவேண்டும் என்று
6.மனைவி தன் மனதை உயர்த்தினால் அங்கே செல்வம் கொட்டும்.

இதன் வழி வாழ்க்கையை நடத்தினால் அந்தக் குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் தேடி வரும்.


இந்த மனித வாழ்க்கையில் நிறைவு எய்த முடியும். உடலை விட்டுச் செல்லும் பொழுது ஏகாந்தமாக “விண் செல்ல முடியும்.

Monday, May 15, 2017

தலைவாசல் பழங்காலத்தில் கீழ்க்கண்டவாறு அமைத்தார்கள்.


தலைவாசல் பழங்காலத்தில் கீழ்க்கண்டவாறு அமைத்தார்கள்.
I – பழைய சித்தாந்தம் அல்லது முறை :
1. கிழக்குப் பார்த்த வீடு :
கிழக்குப் பார்த்த வீட்டிற்கு முன்பாக நின்று வலதுபுறம் முதல் இடப்புறம் வரை (ஈசான்ய முதல் அக்னிவரை) 9 பிரிவுகளாகப் பிரிக்க வேண்டு அதைச் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்று முறையே பிரிக்க வேண்டும். இதில் சந்திரன் பகுதியிலும் மற்றும் புதன், குரு, சுக்கிரன் பகுதியிலும் தலைவாசல் அமைக்க வேண்டும்.
கிழக்கு தலைவாசல் கொண்ட இல்லத்தில் தலைவாசல் வடகிழக்குத் திசையை நோக்கி இருக்கும்படி கட்டினால் செல்வம் வளரும். தொன்கிழக்குத் திசை நோக்கி வாசல் அமைத்தால் பல சிக்கல்கள் உண்டாகும். நெருப்பால் அச்சம், கடன் ஏற்படுதல், ரோகங்கள் போன்றவை ஏற்படும்.
2. தெற்கில் திசை பார்த்த வீடு :
தெற்கில் தெரு இருந்து தெற்கு நோக்கித் தலைவாசல் அமைக்கும்போது, கிழக்கிலிருந்து மேற்காக வீட்டின் சுவரை ஒன்பது பகுதிகளாக்கி, கிழக்கிலிருந்து முறையே சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என ஒன்பது கிரகங்களுக்கும் பங்கிட வேண்டும். சந்திரன் அல்லது புதன், குரு, சுக்கிரன் பகுதியில் தலைவாசல் வைத்துக் கொள்வது நன்மைகள் தரும்.
தெற்குத் திசையில் தலைவாசல் இருக்கும்போது, அதற்கு நேராக வடக்கில் ஒரு வாயில் இருக்க வேண்டும். தெற்கில் மட்டும் ஒரு வாயில் அமைக்கக் கூடாது. மேற்கு வாயில் வைக்கக் கூடாது.
இந்தத் திசை வாயில் வைக்கும்போது வாயில் தென்மேற்குத் திசையை நோக்கி வைத்தால் பகைவரால் துன்பம், குலநாசம் அகால மரணம் போன்ற துன்பங்கள் ஏற்படும் தென்கிழக்குத் திசை நோக்கி அமைத்தால், நெருப்பால் அல்லது ஆயுதத்தால் தீங்கு எனப் பல துன்பங்கள் தரும். எனவே, சரியாகத் தெற்கு நோக்கியே அமைக்க வேண்டும்.
தெற்கு நோக்கிய வீட்டில் தெற்குப் பகுதி வீட்டை உயர்த்தி மாடி கட்டி வசித்தால் செல்வம் மிகும். தெற்கு வாசல் வீட்டிற்கு மழைநீர் மற்றும் வீட்டில் பிழங்கும் நீர் முதலியவை வடக்கு நோக்கிச் செல்லும்படி நீரோட்ட வழி drainage அமைக்க வேண்டும். கிழக்குப் பகுதியில் காலியிடம் அதிகமிருந்தால் ஆண் சந்ததி உண்டு. வடக்கில் காலி இடம் அதிகமிருந்தால் செல்வச் சிறப்பும் உண்டு.
3. மேற்கு நோக்கிய வீடு :
வீட்டின் முன்புறம் நின்று, தெற்கு முதல் வடக்காக உள்ள கட்டடத்தை 9 பாகங்களாகப் பிரித்து, முறையே சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது என்று பங்கிட வேண்டும். சந்திரன் பகுதியிலும், குரு, புதன், சுக்கிரன் பகுதியிலும் தலைவாசல் அமைக்க வேண்டும்.
மேற்கு நோக்கிய இல்லத்தின் தலைவாசல் சரியாக மேற்கு நோக்கி அமைக்க வேண்டும். தென்மேற்கு நோக்கியோ, வடமேற்கு நோக்கியோ இருக்கக் கூடாது. தீய பலன்கள் கொடுக்கும்.
4. வடக்குத் திசை நோக்கிய வீடு :
இந்தத் திசை கொண்ட கட்டடங்களில் தலைவாசல் அமைக்குபோது கட்டடத்திற்கு வடபுறம் நின்று மேற்கிலிருந்து கிழக்காக 9 பாகம் செய்ய வேண்டும். முன்பு கூறியது போன்று சந்திரன் பகுதியிலும், குரு, புதன், சுக்கிரன் பகுதியிலும் தலைவாசல் அமைக்க வேண்டும்.
தற்போது சூரியன் முதலாகக் கேது வரையிலான பகுதிகளில் நடைவைத்தால் ஏற்படும் பலன்களைப் பார்ப்போம்.
1. சூரியன் – ஆதாயம் குறையும் தாய்க்கும், பிள்ளைக்கும் கருத்து
வேறுபாடு சண்டை சச்சரவுகள் உண்டு.
2. சந்திரன் – விருத்தியும், தாழ்ச்சியும் மாறி வரும்.
3. செவ்வாய் – மனைவிக்கு ஆகாது. எதிரிகள் பயம் உண்டு.
4. புதன் – லட்சுமி கடாக்ஷம், கல்வியறிவு மிகும்.
5. குரு – தனதான்ய சம்பத்து, ஆபரணச் சேர்க்கை.
6. சுக்கிரன் – நீண்ட ஆயுள், சுபபலன்கள், யோகபாக்கியம்
7. சனி – பொருள் நாசம், வழக்கு, கலகம்.
8. ராகு, கேது – கட்டடம் அடிக்கடி கைமாறும், தீய பலன்கள்
கொடுக்கும்.
எனவே, புதன், குரு பகுதியில்தான் வைக்க வேண்டும். மிகுந்த நன்மை பயக்கும். சுக்கிரன் பகுதி தியேட்டர்கள், பெண்கள் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு அமைக்கலாம். பெண்கள் ஆதிக்கம் மிகும். மற்றப் பகுதிகளில் கூடாது.

புதுமனை சகுனம்

நல்லகாரியம் எதைச் செய்யக் கிளம்பினாலும் சகுனம் பார்ப்பது முக்கியமாகும். நாம் செய்யப் புறப்படும் காரியம் வெற்றியைக் கொடுக்குமா அல்லது தோல்வியைத் தருமா என்பதை சகுனம் மூலமாகவே தெரிந்து கொண்டு விடலாம்.

புதுமனையில் கட்டடவேலையை ஆரம்பிப்பதற்காக செல்லும் போதும் மனை முகூர்த்தம் செய்வதற்காகச் செல்லும் போதும், கிரகப்பிரவேசம் செய்யப் புறப்படும் போதும் காணப்படும் சகுனங்களைக் கவனிக்க வேண்டும். எல்லா வகையான சகுனங்களுக்கும் பலன் உண்டு.
மனையை நோக்கிப் புறப்படும்போது இளவயதும் அழகும் இலட்சுமிகடாட்சமான முகமும் மெலிவான மேனியும் கருத்த கூந்தலும் கொண்ட சுமங்கலிப்பெண் எதிரே வந்தால் அது நல்ல சகுனமாகும். மனையில் கட்டப்படும் வீட்டில் வாழ்பவர்கள் எல்லா வகையான நன்மைகளையும் பெறுவார்கள்.
இரண்டு பசுக்கள் குறுக்கே வந்தால் அது நல்ல சகுனமாகும். அதேபோல் எதிரே சவஊர்வலம் வந்தாலும் தலைக்கு மேல் கருடன் வலப்பக்கத்திலிருந்து இடது பக்கமாக வட்டமிட்டாலும் அவையும் நல்ல சகுனங்களே.
எதிரே விதவைப்பெண் வந்தால் அது தீய சகுனம் ஆகும். எதிரே எருமை மாடுகள் வந்தாலும் வியாதியஸ்தர்கள் வந்தாலும் அவையும் தீய சகுனங்களே.
வீடு கட்டும் மனையை அடையும்போது பல்லி வலப்புறத்திலிருந்து சொன்னால் அங்கு வீடுகட்டி வாழ்பவர்களின் வாழக்கை, அமைதியும் நிம்மதியும் நிறைந்தவையாக இருக்கும்.
பல்லியானது இடது பக்கதிலிருந்து சொன்னால் அங்கு கட்டப்படும் வீட்டில் வாழ்பவர்கள் மிகுந்த செல்வத்துடன் பிறரை அதிகாரம் செய்யும் அந்தஸ்துடனும் வாழ்வார்கள்.
மனையை அடையும்போது அங்கு வெள்ளைப் பசு அல்லது வெண்ணிறக் காளை மேய்ந்து கொண்டிருப்தைக் காண நேர்ந்தால் அங்கு வீடுகட்டி வாழ்பவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்திருக்கும். வேகமான முன்னேற்றம் உண்டாகும் .
மனையில் வெள்ளைப்புறாவைக் காண நேரிட்டால் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் வெண்ணிறக் கோழியைப் பார்க்க நேர்ந்தால் உறவினர்களின் உதவியும் ஆதரவும் எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
வீடு கட்டப்படும் மனையை அடையும்போது எதிரே ஒணான் வந்தால் அது தீய சகுனமாகும். அதே போல் பூமியை வண்டுகள் துளைப்பதைப் பார்ப்பதும் கெட்ட சகுனமாகக் கருத வேண்டும். அங்கு வீடு கட்டி வாழ்பவர்கள் வறுமையாலும் வியாதிகளாலும் பாதிக்கப்படுவார்கள்.
மனையில் கறுப்பு நிறப் பசு அல்லது காளையைப் பார்ப்பது கெட்ட சகுனமாகும். அதேபோல் அங்கு கறுப்பு நிறப் புழுவைக் காண்பதும் கெட்ட சகுனம். அத்தகைய சகுனங்கள் தென்பட்டால் கட்டட வேலையை உடனே ஆரம்பிக்கக்கூடாது. அதை மூன்று அல்லது நான்கு நாட்களுக்குத் தள்ளிப் போட வேண்டும்.
மனையில் நுழையும் போது அங்கு எறும்புகள் வரிசையில்லாமல் செல்வதைப் பார்க்க நேரிட்டால் அது தீய சகுனமாகும். அன்றைய தினம் கட்டட வேலையை ஆரம்பிக்க கூடாது.
கட்டட மனையில் நுழையும்போது காக்கைகள் கத்திக் கொண்டே வலதுபுறத்திலிருந்து இடது பக்கமாகப் பறந்து சென்றால் அது நல்ல சகுனமாகும். வீடு கட்டுபவருக்கு ஏதேனும் துன்பங்கள் இருந்தால் அவை நீங்கி நற்பலன்களாக நடைபெறத்தொடங்கும்.
அதேபோல் கட்டட மனைக்குள் நுழையும் போது கோழி, கிளி, பசு, கொக்கு, அணில், கழுதை, நரி, வேங்கை, முயல் போன்றவை வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக ஒடுவதும் நல்ல சகுனங்களே.
மனைக்குச் சென்றுகொண்டிருக்கும் போது அல்லது மனைக்குள் நுழையும்போது குடிகாரன் பிச்சைக் காரன், கூனன், முடவன், குருடன், நொண்டி, சிதைந்த மூக்கைக் கொண்டவன், சுடுகாடு காக்கும் வெட்டியான், வலையை வைத்துக் கொண்டிருக்கும் வலைஞன், செக்காட்டுபவன் போன்றவர்களைக் காண்பது தீய சகுனமாகும்.
அதேபோல் அழுக்கான ஆடைகளை அணிந்தவன், செம்பட்டைமுடி கொண்டவன், ஒற்றைக்கண் பெற்றவன், கூந்தலை விரித்துப் போட்டிக் கொண்டிருக்கும் பெண் கையில் தடி வைத்திருப்பவன், சன்யாசி போன்றவர்களைப் பார்ப்பதும் தீய சகுனங்களாகவே கருதப்படவேண்டும்.
வீடுகட்டும் மனைக்குச் சென்று கொண்டிருக்கும் போது அல்லது மனைக்குள் நுழையும்போது நிறைகுடம் தாங்கிய சுமங்கலி, யானை, தனிமனித்ச்ன், சலவைத் தொழிலாளி, குதிரை, சிவந்த நிற ஆடைகளை அணிந்த கிழவி, பால், நெய், நீர், இறைச்சி, தயிர்குடம், மதுக்குடம், போன்றவை எதிர்பட்டால் இது மிகவும் நல்ல சகுனமாகும். அங்கு வீடு கட்டிவர்களுக்கு செல்வமும் செல்வாக்கும் நிறைந்த வாழ்க்கை அமையும்.