Saturday, July 29, 2023

 இறைவனை எந்த வயதில் வழிபட்டால் மனம் பக்குவமடையும்
இறைவழிபாட்டிற்கும் வயதுக்கும் என்ன சம்பந்தம்? பிரகலாதன் கருப்பையிலேயே பகவான் நாமம் ஜபம் செய்யத் துவங்கிவிட்டான். திருஞானசம்பந்தர் மூன்று வயதில் தேவாரம் பாடத் துவங்கிவிட்டார். இக்காலத்தில் கூட ஒரு சிலர் இளம் வயதிலேயே இறைவனை வழிபட்டு பக்குவம் அடைந்திருக்கிறார்கள். இறைவனை வழிபட்டால் நல்லது நடக்கும் என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து பக்தியை உண்டுபண்ண வேண்டும். அந்த பக்தி அவர்களைப் பக்குவப்படுத்தி விடும்.

 அகல் விளக்குகளில் மற்றவர் ஏற்றிய  தீபம் நாம் ஏற்றலாமா?


யார் ஏற்றினாலும் தீபம் ஒன்று தான். சுவாமி சந்நிதியில் தீபம் ஏற்றினால் நாம் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கிறது. இது விளக்கேற்றினால் கிடைக்கும் பலன் தானே தவிர எரிகிற விளக்கில் ஒன்றுமில்லை. ஒருவர்
ஏற்றிய விளக்கில் நாம் மீண்டும் விளக்கேற்றினால் அவரது பாவம் நமக்கு வந்துவிடாது. நமது புண்ணியமும் அவருக்குப் போய் விடாது. சந்நிதியில் விளக்கேற்றுகிறோம் என்ற தூய சிந்தனையுடன் மட்டும் தீபம் ஏற்றுங்கள். அதிகமாக தீக்குச்சிகளை உபயோகிப்பதால் குச்சிகள் குவியும் தொந்தரவும் இருக்காது.