திருத்துறைப்பூண்டியில் உள்ள ஔஷதீஸ்வரர் ஆலயம் அஸ்வினி நட்சத்திரம் வழிபட்ட ஆலயம். இந்த சனிப்பெயர்ச்சியில் இருந்து ஆண்டுக்கு மூன்று முறை அஸ்வினி நட்சத்திர நாளில் இந்த ஆலயம் சென்று வழிபட்டு வரலாம். மருத்துவ குணங்கள் கொண்டஆலயம், தன்னை தரிசனம் செய்பவர்களின் பிணிகளையும், துன்பத்தையும் போக்குகிறது. பிரம்மதேவர் இந்த ஸ்தலப் பகுதிக்கு வந்து பிரம்மதீர்த்தம் என்ற தீர்த்தத்தை உருவாக்கி, பூஜை செய்த போது வில்வ மரத்தடியில் சிவபெருமான் ஜோதிலிங்கமாக காட்சி அளித்தார். அன்றைய தினம் அஸ்வினி நடச்சத்திரம் ஆனதால் அஸ்வினி நட்சத்திரகாரர்களுக்கு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது