Sunday, August 13, 2017

குல தெய்வம்
குலத்தையும் காக்கும், குடும்பத்தையும் காக்கும் தெய்வம்.மனிதன் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.  சில அதில் சந்தோஷத்தை கொண்டு வரும்.  சில மனக் கவலையை தரும்.  சந்தோஷத்தை கொண்டு வரும் போது அவன் எதை பற்றியும் கவலை படுவதில்லை.  ஆனால் மனக் கவலை வரும் போது என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் நிற்கிறான்.  அதற்கு ஏதாவது பரிகாரம் இருக்குமா என்று குடும்ப பெரியவர்களை கேட்கிறான்.  சிலர் குடும்ப வழக்கப்படி கோடாங்கியை கேட்டு உடுக்கடித்து தெய்வ குறி கேட்பார்கள்.  சிலர் ஜாதகத்தை குடும்ப ஜோசியரிடம் காட்டி என்ன பரிகாரம் செய்யலாம் என்று கேட்பார்கள்.  அதற்கு அவர் உங்கள் பூர்வீகத்தை சேர்ந்த குல தெய்வ வழிபாடு செய்யுங்கள் எல்லாம் சரியாகும் என்பார்கள்.  சில குடும்பத்தில் குடும்ப பெரியவர்கள் இருப்பார்கள் .  அவர்களுக்கு அவர்கள் பரம்பரையில் வரும் குல தெய்வம் எது என்று தெரியும். உடனே சென்று பரிகாரம் செய்வார்கள்.  சிலருக்கு பரம்பரை குல தெய்வம் எது என்று தெரியாது.  அவர்கள் என்ன செய்வார்கள்.  ஜாதகத்தை வைத்து குல தெய்வம் கண்டு பிடிக்க முடியுமா.  நிச்சயமாக முடியும். ஒரு ஜாதகத்தில்  தெய்வ ஸ்தானம் என்பது ஐந்தாம் இடமும் ஒன்பதாம் இடமும் ஆகும்.  ஐந்தாம் இடம் பூர்வ புண்யஸ்தானம்.  தந்தை வழி பாட்டனார்களை சொல்லுமிடம். அதன் ஐந்தாம் இடம் ஜாதகத்தின் ஒன்பதாம் பாவமாகும்.  அவர்களின் இஷ்ட தேவதையை சொல்லுமிடம்.  அதேபோல் ஒன்பதாம் இடத்திற்கு ஒன்பதாம் இடம் ஐந்தாம் பாவமாகும்.  அதாவது தந்தை வழிபட்ட  தெய்வத்தை சொல்லுமிடமாகும்.  ஆகவே இந்த இரு இடங்களை கொண்டு குல தெய்வங்களை கண்டு பிடிக்கலாம் .  இந்த இடங்கள் ஆண் ராசியா, பெண் ராசிய எனக் கண்டு அந்த தெய்வங்கள் ஆண் தெய்வங்களா, பெண் தெய்வங்களா என தெரிந்து கொள்ளலாம். மேலும் அது நில ராசியில் உள்ளதா, நீர் ராசியில் உள்ளதா, என்பதை தெரிந்து கொண்டு அதன் இருக்குமிடத்தை கண்டு கொள்ளலாம். அதாவது  ஊரின் எல்லையில் உள்ள நீர் சார்ந்த இடஙகளுக்கு அருகில் இருக்கும். நில ராசியில் நின்றால் வயல் வெளி சார்ந்த இடங்களில் இருக்கும். நெருப்பு ராசியில் நின்றால் மலை மேல் இருக்கும்.  காற்று ராசியில் நின்றால் அது இடம் மாறி நிற்கலாம்.  இது ஜாதகர் மூத்த பிள்ளையாக இருந்தால் அவர் ஜாதகத்தில் இருந்து கண்டு பிடிக்கலாம்.ஒரு குடும்பத்திற்கு குல தெய்வம் ஒன்றும் அதன் பரிவார தெய்வங்கள் இரண்டு சம்பந்தம் கொள்ளும்.  அதாவது ஒருவரின் பூர்வீகத்தில்  அதாவது உங்களுக்கு முன்பு ஏழு தலைமுறை பங்காளிகள் மூன்று தலைமுறையாக  ஒன்று சேர்ந்து எங்கு வாழ்ந்திருக்கிறார்களா அந்த ஊரில் இருக்கும்.  இதை குடும்பத்தில் உள்ள மூத்த பெரியவர்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.சிலர் கேட்கலாம்  எனக்கு மூத்த பெரியவர்கள் யாரும் இல்லை.  இருப்பவர்களுக்கும் எங்கள் குல தெய்வம் எது என்று தெரியவில்லை.  என்ன செய்வது என்று கேட்டால் அதை பற்றி கவலை கொள்ள வேண்டாம்.   நிறைந்த வெள்ளிக் கிழமை   அன்று ஸ்வாமி சன்னதியில் (பூஜை அறையில்)   விடியற்காலை பிரம்ம முஹூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கக்ப்படி நெற்றிக்கு இட்டுக் கொண்டு, ஒரு ஐந்து முக குத்து விளக்கு எற்றி, அதன் தண்டு பாகத்தில் ஒரு புதிய வஸ்த்திரம் சாற்றி, பூ சாற்றி  அதற்கு முன்பு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு , வைத்து, சர்க்கரை பொங்கலிட்டு தீபம், தூபம் காட்டி,  “எங்கள் குல தெய்வம் தெரியாமல் நாங்கள் மன வருத்தத்தில் இருக்கிறோம் . ஆகவே எங்கள் குலதெய்வத்தை நினைத்து,  தங்களையே அவராக பாவித்து இந்த படையலை சமர்ப்பிக்கிறோம்.  இதனை தாங்கள் ஏற்றுக்கொண்டு சீக்கிரமாக எங்கள் குல தெய்வத்தை காட்டுவீராக”  என்று வேண்டிக் கொண்டால் விரைவில் உங்கள் முன் தென்படுவார்.  அவர் இருக்கும் இடத்தை காட்டுவார். இன்னொரு முறை இருக்கிறது.   உங்கள் வீட்டின் தலை வாசலில் நிலையை கழுவி மஞ்சள் பூசி, குங்குமம் , சந்தனம் இட்டு  வஸ்த்திரம் சாற்றி, வெற்றிலை பாக்கு பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலைப்படி பூஜை செய்து மேற் சொன்னவாறு அதே வேளையில் வேண்டிக் கொண்டால் உங்கள் குல தெய்வம் கண்ணில் படும்.   மொத்தம் மூன்று தெய்வங்கள் ஒரு குடும்பத்துக்கு வரும். அதாவது ஊருக்குள் இருக்கும் மூல தெய்வம்.  அது பெருமாளாக இருக்கலாம்,  சிவனாக இருக்கலாம், அம்மனாக இருக்கலாம்.   பின் காவல் தெய்வங்களாக ஒரு கருப்பு வரும். அது பெண் தெய்வமாக இருக்கலாம் அல்லது ஆண் தெய்வமாக இருக்கலாம்.  மொத்தத்தில் பதினெட்டு ஆண் கருப்பு ( இவை வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும்)  பதினெட்டு பெண் காவல் தெய்வங்கள்.  அவை யாவை என பார்ப்போம்.ஐய்யனார்,  மதுரை வீரன்,  காத்தவராயன், ஒண்டிக் கருப்பன், கருப்பண்ண சாமி, வீரனார், சங்கிலிக் கருப்பன், ஆகாய கருப்பன், ஆத்தடி கருப்பன், நொண்டிக் கருப்பன், மார்நாட்டு கருப்பன், மண்டக் கருப்பன், முன்னடிக் கருப்பன், சமயக் கருப்பன், பெரிய கருப்பன், சின்ன கருப்பன், சப்பாணி கருப்பன், சோனமுத்து கருப்பன், முனியாண்டி, பெரியாண்டவர், பால்முனி, வண்னிகருப்பு சாமி, மந்தை கருப்புசாமி, ஒத்தைபனை கருப்பு,  சுடலை மாடன், மாசான கருப்புசாமி, வலநாட்டு கருப்பு சாமி, பதினெட்டாம்படிக் கருப்பன், சந்தான கருப்பன், பால்பாரை முத்து கருப்பு சாமி, கரடையன் சாமி, காட்டு கருப்பு சாமி, புளியாடி கருப்பு, காரையாடி சின்ன கருப்பு, வேட்டை கருப்பு சாமி, குள்ள கருப்பு சாமி, பெருங்காடு கருப்புசாமி, பொன்னுவீரையன் கருப்பு சாமி, கோட்டை கருப்பு சாமி,  மூடுபாறை கருப்பு சாமி, கிள்ளிக்கூண்டு கருப்பு சாமி, மலையாள கருப்பு சாமி, கள்ளன் களச்சி கருப்பு சாமி, பாவாடை ராயன், சாஸ்தா.  இவர்கள் ஆண் கருப்பு  தெய்வங்கள். ஊரை காக்கும் எல்லை  தெய்வங்கள்.வீரமா காளி, குலுமாயி அம்மன், மகமாயி,  எல்லை பிடாரி,  பெரியாச்சி, எல்லை மாரி,  பேச்சியம்மன், பூவாடைகாரி,  செல்லியம்மன், கன்னிமார்,  சீலைகாரி, பச்சையம்மன், துலக்கானத்தம்மன், வனதுர்க்கை, செல்லாயி அம்மன், காட்டேரி அம்மன், அம்முச்சியார், மாசானியம்மன்,  இவர்கள் பெண் கருப்பு எல்லை தெய்வங்கள்.  குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவசியம்.  வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று  அவர்களுக்கு செய்யவேண்டியதை செய்து, கொடுக்க வேண்டியதை கொடுத்தால் குலம் தழைத்து, வரும் சந்ததிகள் சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிக்கும். அவர்கள் உங்களிடம் அதிகம் எதுவும் எதிர்பார்ப்பதில்லை.    உங்கள் கையால் ஒரு சாதரண அபிஷேகம்,  ஒரு வஸ்த்திரம், ஒரு கவளம் அரிசி வெல்லம் கலந்த சோறு.  இதை கொடுத்தாலே பொதும்.  அவர்கள் எப்போதுமே உங்கள் வீட்டின் வாசலில் காவலாக நின்று எந்த கெட்ட விஷயத்தையும் அண்ட விடமாட்டார்கள். ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி , சனி இவர்க்கள் 6,8,12ம் இடங்களில் மறைந்தாலோ,  நீச்சப் பட்டாலோ நீங்கள் உங்கள் குல தெய்வங்களை சரியாக வழிபடவில்லை என்று அர்த்தம்.  குல தெய்வம் சாபமிடாது. அந்த குலத்தை சார்ந்த நீங்கள் சரியாக வழிபடவில்லையே என்று மனது வருத்தப்படும். அதனால் வீட்டில் நடக்க வேண்டிய நல்ல விஷயங்கள் தள்ளி போகும்.  ஆகவே எல்லோரும் தவறாது குல தெய்வ வழிபாட்டை செய்து சந்தோஷமாயிருங்கள்.      நாள் செய்யாததை கோள் செய்யும்.  கோள் செய்யாதை குல தெய்வம் செய்யும்.வாழ்க வளமுடன

Tuesday, August 1, 2017

அசுபமான கனவும் அதன் பலன்களும்}
கனவில் ஒரு நாயோ அல்லது குள்ள நரியோ,கழுகோ, பிசாசோ அல்லது கறுப்பு
பூச்சியோ, புழுவோ இவற்றைக் கண்டால் அது அபரிமிதமான துக்கத்தைக் கொடுக்கும்.
கனவில் ஒரு காகம்,கழுகு பருந்து,பிசாசு அல்லது இராட்சசன் ஆல மரத்தில் ஏறுவது போல் கண்டாலோ,அதிலிருந்து விழுவது போல் கண்டாலோ அது அபரிமிதமான துக்கத்தைக் கொடுக்கும்
கனவில் கறுப்பு நிறமுள்ள கொடிய பூச்சிகளையோ,கறுப்பு பசுவையோ மரம் ஏறுவதை போலக் கண்டாலும்,இவற்றுடன் தொடர்பு இருப்பது போல் கண்டாலும்
அதிகமான மன உலைச்சல் ஏற்படும்
கனவில் குதிரை,ஒட்டகம்,கார் போன்ற வாகனம் எருது,நாய் அல்லது கறுப்பு பெண் இவற்றைக் கண்டால் துக்கம் ஏற்படும்.
கனவில் தேவதைகள் ஆடுவது போன்ற இடத்தையோ, அவர்களின் சிரிப்பையோ,
அழுகையையோ,ஒருவரை ஒருவர் முதுகில் அடிப்பதையோ,ஓடுவதையோ கண்டால் அந்த இடத்தில் அழிவு ஏற்படும்,
கனவில் கம்பளித்துணியையோ,வெள்ளியினால் ஆனசதுரத்தையோ, தாயக் கட்டைகளையோ, இரும்புக் குவியல்கல்,எள்ளுச்செடி பன்றி,பூனை,குரங்கு வளை
இவற்றைப் பார்த்தால் இறப்பு ஏற்படும்.
கனவில் சிவப்பு வஸ்திரம் அணிந்த ஒரு பெண்ணை தழுவுவது போல் கண்டாலும்,வாசனைத் திரவியங்களினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தாலும் அந்த
இரவே இறப்பு ஏற்படும்
கனவில் தெற்கு பார்த்த இடத்தில் சிவப்பு வஸ்திரம், சிவப்பு ஆடை அணிந்து சிவப்பு புஷ்பங்கள் அணிந்து இரு கைகளையும் கட்டிக் கொண்டு வந்தால் இறப்பு நிச்சயம்.
கனவில் ஒரு பெண் தலையில் உயரே தூக்கிய குச்சி போன்ற தலை மயிருடன்
கண்டால் காண்பவனுக்கோ அல்லது ஆசானுக்கோ இறப்பு ஏற்படும்.
கனவில் ஒரு சண்டாளனையோ அல்லது தவிர்க்கப்பட்டவனையோ தாழ்த்தப்பட்டவனையோ கீழ்ச்சாதியினரையோ, காகத்தையோ.கொடுமையான மிருகத்தையோ, கறுப்பு நிற நாகப்பாம்பையோ கண்டால் இறப்பு நிச்சயம்.
கனவில் உடல் முழுவதும் தேனோ,அல்லது நெய்யோ எண்ணையோ பூசி இருப்பது போல் கண்டால் வியாதிகள் தொடர்ந்து வரும்.
கனவில் ஒரு குரங்கினுடன் தொடர்போ,அல்லது பன்றியுடன் தொடர்போ,பற்கள் நீளமாக உள்ள மிருகத்துடன் தொடர்போ, கொம்புகளை ஆயுதமாக உள்ள மிருகத்துடன் தொடர்போ கண்டால் அதிகமான நாசம் ஏற்படும்.
கனவில் உடைந்தப் பன்னீர் குடத்தைக் கண்டால் துக்கம் உண்டாகும்.
கனவில் ஆகாயத்திலிருந்து நக்ஷத்திரங்கள் விழுவதைப்போலவும் சூரியனோ, சந்திரனோ வலுவிழந்து காணப்பட்டாலும் அதிகமான துக்கமோ, அல்லது ஒரு இழப்போ ஏற்படும்.
கனவில் ஒரு தண்ணீர் தொட்டியையோ அல்லது நதியையோ,சமூத்திரத்தையோ,
தண்ணீர் முற்றிலும் வற்றிப்போனது போல் கனவு கண்டால் நஷ்டம் ஏற்படும்
கனவில் ஒருவன் தனது உடலை எண்ணெயினாலோ அல்லது குங்குமத்தினாலோ பூசினதுபோல் கண்டால் அவனுக்கு தொழுநோய் ஏற்படும் அத்துடன் கூட நாயினால் உபாதையும், ஒருமாட்டினால் உபாதையும் ஏற்படும்
கனவில் பற்கள் விழுவது போல் கண்டால் அல்லது ஆடுவது போல் கண்டாலும் மனதில் கவலை உறவினர்களின் இழப்பு ஆபத்து இவை நிச்சயம்.

கனவுகள் தரும் பலன்கள்
இரவில் காணும் கனவுகளுக்கே பலன் தரும் நிலையாகும் பகற்கனவு பலன் தராது

1,)சந்திரனை,சூரியன் பிடிப்பதாகக் கனவு கண்டால்-யோகம் தரும்

2,)பழமரங்கள்,மலைப்பிரதேசம் இவைகளில்-யோகமாகும்

3,)மரங்கள் பழங்கள் அதிகமாக இருக்க மாமரம்,புளியமரம் பாக்குமரம் தென்னைமரம் இவற்றில் காய்களும் நிறைந்திருக்க-செல்வம் சேரும்

4,)எதிலும் ஏறுவதாகக் கனவு கண்டால்-உயர்நிலை பெறுவார்கள்

5,)ஆற்றுநீரை, கடல் அலையைப் பிடிப்பதாகக் கனவு கண்டால்-செல்வம் சேரும்

6,)பெற்றோர்,நண்பர்களை,மக்களைப் பிடிப்பதாக
கனவு கண்டால்-புகழ் பெறுவார்கள்

7,)மதுகுடிப்பதாகவும்,தாசிகளுடன் உறவு கொள்வதாகவும் கனவு கண்டால்-மகிழ்ச்சியான காலமாகும்

8,)வெள்ளைப் பட்டு அணிந்த அழகான பெண்ணைக் கண்டால்-செல்வம் சேரும்

9,)அருவருப்பான மனிதர்கள்,காகம்,மீன்,இரத்தம்,
விலைமாதர் இவர்களைக் கனவில் கண்டால்-
செல்வம் சேரும்

10,)இளம் பெண்,மாலை அணிந்து வெள்ளை உடை அணிந்து,வாசனைப் பொருட்களை படுக்கையில்
அணிந்து,அமர்ந்திருந்தால்-புகழ்பெறும் காலம்

11,)இளம் பெண் தாமரை மலர் ஏந்தி வருவதைப்
பார்த்தால்-அதிர்ஷ்டம் வரும் காலம்

12,)காளைமாடு அரசன், பசு,குதிரை,பிடிப்பதாகக்
இவைகளைப் கண்டால்-மேன்மை பெறும் குடும்பம்
13,)சேவல்,தரும் ஆபத்து மிருகங்கள்,பெரிய மரம்,
பறவை தங்கநிற இவைகளைப் பிடிப்பதாகக் கண்டால்-பெறும் காலம் அதிர்ஷ்டம்

14,)அரசனுடன் இருப்பதாகவும் தேவர்களுடன் பேசுவதாகவும் கண்டால்-உயர்வடையும் நிலையைத் தரும்

15,) வீடு கட்டுவதாகவும்,மரம் நடுவதாகவும், பண்ணை அமைப்பதாகவும் கண்டால் கனவு-
புகழ்பெறுவார்கள்

16,)மலர்.தாமரை,வெள்ளைப்,பூமாலை,ஆபரணம்
இவைகளைப் பெறுவதாகக் கண்டால்-பெறும்புகழ்பெருவார்

17,)மாம்பழம்,பசு சாணம்,இவைகளைக் கண்டால்-
பெறும் காலம் அதிர்ஷ்டம்

18,)பனங்கள் குடிப்பதாகக் கண்டால் கனவு-பெறலாம் லாபம்

19,)காளையை ஓட்டிச் செல்வதாகவும் காரில் தனியாக ஓட்டிச் செல்வதாகவும் குதிரையைச்
செலுத்துவதாகவும் கண்டால்-பெறும் அதிர்ஷ்ட காலமாகும்

20,)மிருகங்களுடன் சண்டையிடுவதாகக் கண்டால்
அதிர்ஷ்டமான காலமாகும்

21,)பால் குடிப்பதாகக் கண்டால்-சேரும் செல்வம்

22,)பாம்பு கடித்து இரத்தம் வருவதாகவும் நாய்கடித்து இரத்தம் வருவதாகவும் கண்டால்-
கனவு அதிர்ஷ்டம் கூடிவரும் காலமாகும்

23,)வெள்ளைநிறப் பாம்பு கையில் கடிப்பதாகக்
கண்டால்-சேரும் செல்வம் ஒரு மாதத்திற்குள்

24,)துண்டிக்கப்பட தலை இரத்தம் கொட்டுவதாகக்
கண்டால்-சேரும் செல்வபெறுக்கு

25,)இளமைக் காலம் முதுயாவதாகக் கனவு கண்டால்-அதாவது கிழவராவதாக கண்டால் நீண்ட ஆயுள் தரும் வரும் விபத்தால் ஆபத்து நீங்கிவிடும்

26,)திருக்கோவிலை அலங்காரம் செய்வதாகக் கனவு கண்டால்-காத்திருக்கிறது நல்ல அதிர்ஷ்டம்

27,)வெள்ளை பசு,வெள்ளை ஆடை,இவைகளைக் கண்டால்-நிச்சயம் வெற்றி

28,)வீடு எரிவதாகவும் தானியம் சேமிப்பதை கண்டால்-செல்வம் சேரும்

29,)தங்கச்சிலையாக-தான் மாறுவதாகக் கண்டால்
கண்டம் விலகிவிடும் புகழ்சேரும்

30,)சாதம்,பழவகைகள், ஆறு,கடல்,தயிர்,பால்,நெய்,
மாங்கனி,சீனிவெல்லம்,பாயசம்,தண்ணீர்க்குடம், சாமரம்,இரத்தம்.சமைத்த மாமிசம்,இவைகளைக் கையில் பிடித்தாலும் சுவைத்தாலும் வேதம் ஓதுவதைக் கேட்டாலும்-செல்வம் சேரும்

31,)தெய்வம்,குரு,சாது,இஷ்ட தெய்வம்,நல்வார்தை இவர்களுடன் பேசுவதாகவும்,பாம்பு, கடிப்பதாகவும்
பூச்சிகடிப்பதாகவும்,பெண்களுடன் பேசுவதாகவும்
கனவு கண்டால்-விளையும் நன்மை விரைவில்

32,)பணம்,சாதம்,வெற்றிலை,பாக்கு,தானியம், இவைகளைப் பெறுவதாகவும்,சாதத்தை உண்பதாகவும்,தான் பால் அபிஷேகம்,செய்யப்படு
வதாகவும் கனவு கண்டால்-விரைவில் லாபம்
பெறுவார்கள்

33,)பிணைக்கைதியாக ஆக்கப்படுவதாகக் தான் கட்டுப்படுவதாக, கண்டால்-தேறிவரும் உடல்நல
ம்

சுக்ரீஸ்வரர் ஆலயம் சுக்ரீஸ்வரர் ஆலயம் சுக்ரீஸ்வரர் ஆலயம் சுற்றாலத்துறையின் போதுமான விளம்பர நடவடிக்கைகள் இல்லாததால், வேலைப்பாடுகள் நிறைந்த மிக அழகான கோயிலாக இருப்பினும், இந்த கலைப் பொக்கிஷம் குறித்த தகவல் உள்ளூர் பக்தர்களுக்கோ, வெளிநாட்டு கலை அர்வலர்களுக்கோ, இது போன்ற ஒரு கோயில் இருப்பதே சரியாக தெரியாது.

திருப்பூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில், பாண்டிய மன்னர்களாலும் சோழர்களாலும் கட்டப்பட்டுள்ள இந்த "சுக்ரீஸ்வரர் கோயில்" குறித்த வரலாறும் விவரமும் இது வரை மக்களுக்கு சரியாக சென்றடையவில்லை. கி.பி.12 ஆம் நூற்றாண்டில் இந்த கோயில் கட்டி முடிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. தற்போது மத்திய தொல்லியல் துறையால் "பாதுகாகப்பட்ட சின்னமாக" அறிவிக்கப்பட்டு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

நான்கு வருடங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், சுற்றாலத்துறையும் இணைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த கோயில் சிறப்பம்சம் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் எந்த பலனும் இல்லை.ஆகையால் நம்மால் முடிந்த அளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

கோயில் குறித்த சிறப்பம்சங்கள்.

1) அம்மனுக்கென தனி கோயிலும், சிவனுக்கென தனி கோயிலும் அமைந்துள்ளது.

2) அம்மனுக்கென தனி கோயில்,கோயிலின் வலது புறம் இருப்பதால் பாண்டியர்களின் பணி என்பது தெரிகின்றது.

3)கோயிலின் விமானம் சோழர்களின் பணியை காட்டுகின்றது.

4)ஒன்றின் பின் ஒன்றாக இரண்டு நந்திகள் உள்ள கோயில்.

5) ஐந்து லிங்கங்கள் உள்ள கோயில், மூன்று வெளியில், ஒன்று மூலவர், மற்றொன்று கண்ணுக்கு தெரியாதது.

6) கொங்கு பகுதியில் சிவன் கோயில்களில் இருக்கும் "தீப ஸ்தம்பம்" இந்த கோயிலில் கிடையாது.

6) கோயில் கிழக்கே பார்த்து இருந்தாலும், உள்ளே செல்லும் படிகள் தெற்கு பார்த்து அமைந்துள்ளது.

7) கொங்கு நாட்டில் உள்ள நான்கு "சிற்ப ஸ்தலங்களில்" இந்த சுக்ரீஸ்வரர் கோயிலும் ஒன்று.

வியாபாரம் செய்ய கடல் வழியாக இந்தியாவின் மேற்கு பகுதிக்கு வந்த கிரேக்கர்களும், ரோமானியர்களும், கப்பலில் இருந்து இறங்கி பின் சாலை வழியாக அன்றைய சோழ நகருக்கு செல்ல பயன்படுத்திய வழி.

9) பண்டைய கொங்கு வர்தக வழியில் அமைந்திருந்த இந்த கோயிலின் (Kongu Trade Route) சிவனை "குரக்குதை நாயனார்" என்று வழிபட்டுள்ளனர்.

10) பாண்டியர்களால் கட்டப்பட்ட கோயிலாக இருப்பினும், இங்குள்ள சில சிற்பங்கள்,கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே, இந்த இடத்தில் சிவ லிங்கத்தை வைத்து அன்றைய பழங்குடி மக்கள் பூஜைகள் மேற்கொண்டு வந்துள்ளது தெரிகின்றது.

இவ்வளவு கலை அம்சத்துடனும், வரலாற்று பின்னணியுடனும் இருக்கும் இந்த கோயில் குறித்த தகவலை உங்களை நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.கோவை, திருப்பூர் செல்லும் போது கட்டாயம் சென்று காண வேண்டிய மிக அழகான கோயில்.