ஆண்டாள் தன் பாசுரத்தில் “கோட்டுக்கால் கட்டிலின் மீதே” எனப் பாடி பள்ளியறை அமைப்பை தெளிவாக படம் பிடித்து காட்டுகிறாள்.“கோடு” என்றால் யானை தந்தம்.
‘‘யானை தந்தத்தால் செய்த கட்டிலின் மீது உறங்குகிறாய், நாங்கள் எல்லாம் வந்திருக்கிறோம் துயிலெழுந்து வா,’’ என தோழிகள் அழைப்பதாய் இப்பாசுரம் உள்ளது.ஆம். கட்டில் எதனால் செய்திருக்க வேண்டும் என்று திருப்பாவை நமக்கு தெளிவாக்குகிறது.கட்டிலை இப்போதெல்லாம், இரும்பு, பிளாஸ்டிக் போன்றவற்றை கொண்டு செய்கிறோம். இவையெல்லாம் கட்டிலுக்கான சரியான பொருட்கள் அல்ல.
கட்டிலுக்கு ஏற்றதாக சந்தனமரம், தேக்கு, பூவரசு, மருது, கருங்காலி, மூங்கில், கோரை, தர்ப்பை (திருப்புல்லாணியில் ராமர் தர்ப்பசயனத்தில் வீற்றிருக்கிறார்) போன்றவற்றால் மட்டுமே செய்தால் நல்லதென வாஸ்து கூறுகிறது. அதுவும் தலைப்பகுதி சற்றே உயரம் வைத்தும், அப்பகுதிப் பலகை வட்டமாகவோ, செவ்வகமாகவோ, சதுரமாகவோ வேலைப்பாடுகளுடன் இருப்பது நல்லது என்கிறது வாஸ்து விஞ்ஞானம்.
ஏன் இந்த மரங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்? மற்ற பொருட்களைப் படுக்கையாக்கி உபயோகிக்கும்போது எதிர்விளைவுகள் ஏற்பட்டு நோய்வாய்ப் படுதல், தீவிரவாத குணமுடைய குழந்தைகள் உருவாவது, சண்டை சச்சரவுகள் அடிக்கடி வருவது போன்றவை நிகழும்.வெள்ளி, தங்கம் உலோகம் கொண்டும் கட்டில்களை செய்யலாம், அலங்கரிக் கலாம். செம்பு, பித்தளை உலோகங்கள் வடிவமைப்பு செய்ய ஏற்றவை.
மைசூர் மகாராஜா, திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர், தஞ்சை சரபோஜி மன்னர், நாயக்கர் மஹால் அரசர், கிருஷ்ண தேவராயர், பீஜப்பூர் சுல்தான், ஔரங்கசீப், நாட்டுக் கோட்டை நகரத்தார், ராமநாத புரம் பாஸ்கர சேதுபதி ஆகியோர் இப்பொருட் களை கொண்டு கட்டில்கள் செய்து சக போக வாழ்க்கை வாழ்ந்துள்ளார்கள். இதை வரலாறு மூலமும் தெரிந்து கொள்ளமுடியும்; இன்றைக்கும் மியூசியம் எனப்படும் அருங்காட்சியகத்தில் அவற்றை தரிசிக்க முடியும்.
ஊஞ்சல் போல கட்டில் செய்து படுப்பதும் இந்நாளிலும் பல வீடுகளிலும் உண்டு.திவான் எனப்படும் பகல் நேர ஓய்வு படுக்கையும் வடமாநில மக்கள் பலரும் உபயோகிக்கிறார்கள்.இவை எல்லாம் மன்னர்கள், உயர் குடி மக்களுக்குதானே என நினைக்கலாம். நாமும் பலாமரம், மாமரம், வேம்பு, தேக்கு மரக்கட்டிலை உபயோகப்படுத்தலாமே! இதனால் நல்ல தூக்கம் தூங்கி புத்துணர்ச்சியுடன் விழிப்பது நன்மைகளை தோன்றுவிக்கும். அமைதி ததும்பும் அறையாக மாற்ற முடியும்.சரி மெத்தையாக எவற்றை உபயோகிக்கலாம்?
முதல் தேர்வாக “இலவம் பஞ்சு” என்கிறது வாஸ்து விஞ்ஞானம். அதற்கடுத்து “வாழை நார்”, சிறிது தேங்காய் நார் (அடிப்பகுதி) உபயோகப்படுத்தலாம் என மென்மையான பருத்தியை உபயோகப்படுத்துவது நலம் என்றுரைக்கிறது.மாம்பலகை கட்டில் குளிர்ச்சியையும், அமைதியையும், பலாமரப் பலகை ஆழ்ந்த நித்திரை அளிக்க வல்லதாகவும், வேப்பம் பலகை சூடு தணித்து மூல நோய், வெட்கை, அல்சர் எனப்படும் வயிற்று புண்களைக் குணப்படுத்தும் திறன் மிக்கதாகவும் உள்ளன.
எரிந்து போன மரம், ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட மரம், ஏலத்தில் எடுத்த மரம், புயலால் சாய்ந்த மரம் ஆகியவற்றை உபயோகப்படுத்தலாகாது. இதனால் வெறுப்பு, சஞ்சலம், கொலை வெறி, ஒற்றுமையின்மை ஆகிய கெடுபலன்கள் உபயோகிப்பவர்களை வந்து சேரும்.“ச்சீ’’ சக்தி இல்லாத பொருளாக இவை இருப்பதால் இவற்றை உபயோகப்படுத்துவதை தவிர்க்க சொல்கிறது பெங்சூயி. படுக்கை அறையிலிருந்து வெளியே பார்த்தால் நீர்நிலை எதுவும் தெரியக்கூடாது என்கிறது பெங்சூயி.
ரிசார்ட் எனப்படும் பொழுதுபோக்கு இடங்களில் “ரிவர் வியூ” (ஸிவீஸ்மீக்ஷீ க்ஷிவீமீஷ்), பால்ஸ் வியூ (Falls View), டேம் வியூ, நீர்த்தேக்க பார்வை, கடல் காட்சி (ஷிமீணீ க்ஷிவீமீஷ்) என ஆடம்பர பங்களாக்களில் வசிப்பவர்கள் பாதிப்பை அடைவார்கள். சில நாள்கள் தங்குவதில் தவறில்லை. குடும்பம் நடத்த ஏதுவானவையாக மேற்காணும் நீர்நிலை ஒட்டிய பகுதிகள் தவிர்க்கப்பட வேண்டும்.
கட்டாயம் எனில் ஒரு பால்கனியை அமைத்து பூஞ்செடிகள், சிம், கண்ணாடி அமைத்து பரிகாரம் செய்யச் சொல்கிறது பெங்சூயி. பால்கனிக்கு கதவு அவசியம் இருக்க வலியுறுத்துகிறது.
படுக்கையை மூலையில் அமைக்கக் கூடாது. கட்டிலின் 3 புறமும் நடக்கும் வகையிலும் தெற்கு புறம் குறைந்த காலியிடம் விட்டும் படுக்கையை அமைக்க வேண்டும்.மணமான தம்பதியர் அறையில் “பாகுவா” படி சிவப்பு அல்லது வெள்ளை நிற அலங்காரப் பொருட்கள் வைக்க அன்யோன்யம் பெருகும்.
கதவை நோக்கி கால்கள் இருக்கக் கூடாது. இதனால் நல்சக்தி கால்வழியாக வெளியேறி கதவு வழியே சென்று விடுவதால் சோம்பல் தன்மை மிகும்.பரிகாரமாக “கிரிஸ்டல்’’ எனப்படும் பல முகங்கள் கொண்ட கண்ணாடியை தொங்க விடலாம் அல்லது ஓசை எழுப்பும் மணியை தொங்க விட்டு அவ்வப்போது எழும் ஓசையால் குறைபாடு நீங்கப் பெறலாம்.
படுக்கையை ஒட்டி ஜன்னல் கூடாது. இயல்பாக பொறியாளர்கள் அறையின் மையத்தில் ஜன்னல் களை வைத்து “கிராஸ் வெண்டிலேஷன்” - குறுக்குவாட்டு காற்று வீச்சு - என குறிப்பிடுகின்றனர். இவை நல்லதல்ல. அறையின் வடக்கு/ கிழக்கு மூலையில் 9 அங்குலங்கள் தள்ளி ஜன்னல்களை அமைக்கவும். கதவிற்கு எதிர் சுவரின் அருகில் படுப்பது ராஜ
சம்பத்தை அளிக்கும் என்பார்கள்.
கதவுகள் திறக்கும் போது சப்தங்கள் வந்தால் (கோடை காலத்தில் நிகழும்) “ச்சீ’’யின் ஓட்டத்தை வெகுவாக பாதித்து, மன உளைச்சலை தருபவையாக மாறி விடுகின்றன. படுக்கையறையின் நடுவில் கதவை வைக்காமல், வடக்கு / கிழக்கு ஒட்டியே அமைக்க வேண்டும். இதனால் இயல்பான குழந்தைப்பேறு கிட்டும். அவர்கள் நன் மக்களாகவும் இருப்பார்கள்.
அதிகபட்ட வெளிச்சம் “ஷா” வை குறிக்கும் என்பதால் 3 X 3, 4 X 4 சதுர அடிகள் கொண்ட ஜன்னல்கள் (இது 11 X 11, 11 X 16, 16 X 16 அடிகள் கொண்ட படுக்கை அறைக்கு) அமைப்பது சிறந்தது. மற்ற அறைகளில் திரைச்சீலை இல்லை எனினும் கண்டிப்பாக கனமான ஸ்கீரின் படுக்கை அறையில் அமைப்பது சிறந்தது. கண்ணாடிகளையும் கருநீலம், சாம்பல் கலரில் அமைப்பதும் நன்மை தரும்.
ஜன்னல்களை எப்போதும் மூடி வைத்திருக்க கூடாது. “யின்” எனும் எதிர்மறை சக்தி அறைக்குள்ளேயே தங்கிவிடும். இதனால் செல்வ இழப்பும், நோய்களும் எளிதில் வரக்கூடும். அவ்வப்போது திறந்து மூடும் பழக்கத்தை கைக்கொள்ள வேண்டும்.
தென்மேற்கு அறையின் தென் மேற்கு மூலையில் ஜன்னல் இருந்தால் செல்வ இழப்பும், அதிகார பறிப்பும் நிகழும்.படுக்கை அறையின் ஜன்னல் திறந்தால் உயர்ந்த மரம், கம்பம், மின்மாற்றி (டிரான்ஸ்ஃபார்மர்) தெரியக்கூடாது. இதனால் வழக்கு, வியாஜ்ஜியம், விவாதங்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.படுக்கை அறையின் உட்புற வாஸ்து, பெங்சூயி அம்சங்கள்:
புதுமணத்தம்பதிகளின் “சாந்தி முகூர்த்த” நிகழ்விற்கு எத்துணை முக்கியத்துவம் கொடுத்து படுக்கையறையை அலங்கரிப்போமோ, அதனை பொறுத்தே அவர்களின் மகிழ்ச்சி நிலவும். காலையில் கண் விழித்த உடன் இந்த அலங்காரப் பொருட்களே கண்ணில் படும் என்பதால் இவை மனதிற்கு இதம் சேர்த்து மகிழ்ச்சி ஊட்டுபவையாக இருக்க வேண்டும்.
விவாகரத்தான பெரும்பாலான தம்பதிகள் அறை பெரும்பாலும் விரக்தி தரும் அமைப்புகளான சுவரில் கத்தி, சண்டையிடும் போர்வீரன், ஆடு, மாடு, மான் தலைகள், புலி, சிங்க உருவங்கள் என்றும் இப்படி பல ஏற்றுக்கொள்ள இயலாத பொருட்கள் இடம் பெற்றிருப்பதே காரணமாகும். மிகவும் ஒளிரும், பிரகாசமான பொருட்கள் நல்லதல்ல. பொருளற்ற ஓவியம், படங்கள், மிருகங்கள் மோதிக்கொள்ளும் திரைச்சீலைகள், அமைதியை கெடுத்து வெறியை தூண்டுகின்றன.
காதலை / அன்பை தூண்டும் ஓவியங்கள், படங்கள் இடம் பெறுவது சாலச்சிறந்தது. தோல் போன்றவற்றை சுவரில் அலங்கரிப்பதை தவிர்க்க வேண்டும். காமத்தை தூண்டும் படங்களையும் தவிர்க்க வேண்டும்.ஜோடியான ஓநாய்கள், பீனிக்ஸ் பறவைகள், டிராகன், மீன்கள், இரட்டை வாத்துக்கள், ஹம்மிங் பறவைகள் ஒற்றுமை, வலிமையை குறிக்கின்றன.பழக்கூடைகளை படுக்கையறையில் வைப்பது சிறந்ததே. பூக்கூடை நல்லதல்ல. காரணம் இவை வாடி வதங்கி தீயச்சக்திக்கு வழிவகுக்கும்.மாதுளை, ஆப்பிள், திராட்சை, மாம்பழம் போன்றவற்றை படுக்கை அறையில் வைக்க சிறப்பான குழந்தைபேற்றை தருவிக்கும்.
படங்களை குளியலறை கதவிற்கு அருகிலோ, குப்பைக் கூடைக்கு அருகிலோ வைக்கக்கூடாது. குழந்தைகள் படம், சந்தான கோபாலன் படம் ஆகியவை குடும்ப உறவை வலுப்படுத்தும் அலங்காரங்களாகும். படத்தை தூசி இன்றி துடைத்து வைப்பது அவசியம்.
கெட்ட கனவு, பேய் பிசாசு துரத்துவது, அடிபடுவது போன்ற கெட்ட கனவுகள் வந்து தூக்கத்தை பாழ்படுத்தி விடும். இதை தவிர்க்க பெங்சூயி கூறும் உபாயமாக, சிறிய பீங்கான் கிண்ணத்தில் கடல் உப்பை வைத்திருந்தால் கெட்ட கனவுகள் வெகுவாக குறையும். தலைக்கு அருகில் கண்ணாடி சிலைகளையோ, அல்லி, தாமரைகளை (புதிது புதிதாக) வைத்து வந்தால் பொறுப்புகள் எளிதாக நிறைவேறும்.